Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வன விலங்குப் பூங்காவில் புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

வன விலங்குப் பூங்காவில் புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

டான்காஸ்டர் நகருக்கு அருகே அமைந்துள்ள யார்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் நேற்று பிற்பகல் புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஒரு நபர் நுழைந்துள்ளார்

பகிரவும் WhatsApp Facebook

இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள வன விலங்குப் பூங்காவில் புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர், புலி தாக்கியதில் உயிரிழந்தார்.

டான்காஸ்டர் நகருக்கு அருகே அமைந்துள்ள யார்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் நேற்று பிற்பகல் புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஒரு நபர் நுழைந்துள்ளார். அப்போது புலி தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சை அளித்தபோதிலும், அவர் உயிரிழந்தார்.
எனினும், புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் வேறு யாரும் நுழையவில்லை என்றும், பூங்காவுக்கு வந்திருந்த மற்ற பார்வையாளர்களுக்கோ, பொதுமக்களுக்கோ ஆபத்து இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் எதற்காகப் புலிகள் இருந்த பகுதிக்குள் நுழைந்தார் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் யார்க்ஷயர் வனவிலங்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் பூங்கா கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு அழிவின் விளிம்பில் உள்ள அமுர் புலிகளைப் பாதுகாக்கும் வகையில் 2011-ல் ‘புலிகளின் உலகம்’ என்ற சிறப்புப் பகுதி திறக்கப்பட்டது.

சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பகுதியில், பாதுகாப்பான, உயரமான நடைபாதையில் இருந்து பார்வையாளர்கள் புலிகளைப் பார்க்கும் வசதி உள்ளது. மரங்கள், புல்வெளிகள் மற்றும் நீர்நிலைகள் கொண்ட இந்தப் பகுதியில் புலிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சமபவத்துக்குப் பின்னர் அந்தப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. புலி தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும், இந்த வீடியோவை பகிர வேண்டாம் என மக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி
போர் விமானத்தை தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி
அடுத்த செய்தி
ரஷ்ய இளம்பெண் மர்ம மரணம்: என்ன ஆச்சு? விசாரணை கோரும் உலக சுகாதார அமைப்பு

தொடர்புடைய செய்திகள்